2025 மே 07, புதன்கிழமை

தீர்வு என்பது மக்களுக்கானது, தலைவர்களுக்கானதல்ல: சம்பந்தன்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 26 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல, முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது. இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயம் இறைமையின் ஓர் அம்சம். இது மக்களுக்கு உரியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய ஒரு நோக்கு என்ற தொனிப்பொருளில் திருகோணமலை நியு சில்வர் ஸ்டாரில் கூட்டம் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான சி.தண்டாயுதபாணி, கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்தன் ஆகியோருடன் வேட்பாளர்களான மருத்துவர் திருமதி இந்திராணி தர்மராஜா, வெ.சுரேஷ், சி.பளீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை தலைவர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், தொணடர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட சம்பந்தன் அங்கு மேலும் உரையாற்றுகையில்...

“வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது எமக்கு அவமானம் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம், அரசுக்கு எதிராக மரச் சின்னத்தில் போட்டியிடுவதே பெருமை என  தேர்தல் காலத்தில் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார். அரசாங்கத்தை விமர்சித்து தேர்தலில் போட்டியிட்டதால் மக்களின் வாக்கு கணிசமாக அவருக்கு கிடைத்தது. தற்போது ஜனநாயக முடிவுக்கு மாறாக அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஜனநாயக தீர்வு புறந்தள்ளப்பட்டு முஸ்லிம் மக்களின் இறைமை உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஹக்கிம் - முஸ்லிம் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • Mohan Wednesday, 26 September 2012 07:21 PM

    விடுங்க சார், அவங்க ஆச்சு அவங்க கட்சியாச்சு மக்கள் புரிஞ்சு நடந்தால் சரி ..." எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" இது வங்களுக்கு புரியவேணும்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 27 September 2012 08:53 AM

    சிங்கள மக்களைபோல் முஸ்லிம் கட்சிகளுக்கும் மக்களுக்கும் முதுகெழும்பு இருக்கு எனவே யார் என்ன வசைபாடினாலும் நாட்டின் நலன் குறித்தே முஸ்லிம்க்களும் முடிவெடுப்பர் சிங்கள மக்களை போன்றே???

    Reply : 0       0

    jesmin Thursday, 27 September 2012 12:09 PM

    கண்மூடித்தனமாக முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்தமையை கிழக்கின் எந்த புத்தி ஜீவியும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். இதனை தன்மானமுள்ள எவராலும் சரியென ஏற்றுக்கொள்ளவும் முடியாது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X