2025 மே 08, வியாழக்கிழமை

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு குளிரூட்டிகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


திருகோணமலை, கிண்ணியா தள வைத்தியசாலைக்கு முஸ்லிம் ஹெல்பன் ஜேர்மனியின் அனுசரணையுடன் கிண்ணியா ஹஸன் மௌலவி நற்பணி மன்றத்தினால் 5 குளிரூட்டிகள் நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கிண்ணியா தள வைத்தியசாலை மாவட்ட வைத்திய  அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹஸன் மௌலவி நற்பணி மன்றத்தின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான மௌலவி எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி கலந்துகொண்டு இக்குளிரூட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளையிடும் தளபதி ரியல் அட்மிரல் ரவீந்தீர சீ.விஜே குனரட்ன, பிராந்திய சேவைகள் சுகாதார பணிப்பாளருக்கான திட்டமிடல் பிராந்திய வைத்திய அதிகாரி ஸ்ரீகௌரீஸ்வரன், கிண்ணியா பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ் இல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • nijamudeen tr.Kiniya Monday, 22 October 2012 06:56 AM

    நல்லம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X