2025 மே 08, வியாழக்கிழமை

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்

Super User   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் அல் - ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வருடாந்தம் ஒக்டோபர் மாதத்தில் அனுஷ;டிக்கப்படும் முஸ்லிம் எய்ட் தினத்தை முன்னிட்டு  மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாம் ரெக்டோ மற்றும் தடயம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரிசோதனைக்கு உள்ளானதோடு அவசியமானவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இப்பரிசோனை முகாமில் கந்தளாய் தளவைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய குழுவினரோடு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினர்,  ரெக்டோ மற்றும் தடயம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X