2025 மே 08, வியாழக்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குமாறு மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை

Super User   / 2012 ஒக்டோபர் 22 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கடந்த சிறுபோக நெற் செய்கையின் போது வரட்சியால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சிறு போகத்தின் போது கிண்ணியா பிரதேசத்தில் நடு ஊற்று குளம் மற்றும் மணியரசங் குளம் ஆகியன வரட்சியினால் முற்றாக வற்றிப் போயிருந்தன.

இதனால் இக்குளங்களை நம்பி செய்கை பண்ணப்பட்ட சுமார் 135 ஏக்கர் விவசாய நிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்தவித அரச உதவிகளும் கிடைக்கவில்லை.

இதனால் கடன்களை பெற்று பெரும்போக நெற் செய்கையினை மீள ஆரம்பித்துள்ளனர். எனினும் அறுவடை வரை பராமரிப்பு போன்றவற்றிக்கான வசதி வாய்ப்புக்கள் இவர்களுக்கில்லை.

எனவே இவர்களது நலநன கருத்திற் கொண்டு உதவி கிடைக்க ஆவணம் செய்யுமாறு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வேண்டியுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X