2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு முதலமைச்சர் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்,ரமன்)


திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்தை இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு திருகோணமலையிலுள்ள கிழக்கு  மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் ஆங்கில கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பில் கிழக்கு முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்,

"கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வைத்தியசாலைகளை நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலைகளாக அபிவிருத்தி செயதல் மற்றும் திருகோணமலையில் மாற்று வலுவுள்ளோருக்கான கைவினைப்பொருள் பயிற்சி நிலையம் அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் அமெரிக்க கடற்படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றுக்கு இடையில்; கிழக்கு பிராந்திய கடல் பாதுகாப்பு, பயிற்சிகள் மற்றும் இரு நாட்டு கரையோர பாதுகாப்பு படையினருக்கான பயிற்சிகள் அனுபவங்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன" என்றார்.



You May Also Like

  Comments - 0

  • JEYARAJAH G.T Thursday, 25 October 2012 03:39 PM

    எமது நாட்டை அமெரிக்காவுக்கு தாரவாற்காமல் வீட்டால் போதும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X