2025 மே 08, வியாழக்கிழமை

'அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்பு' கருத்தரங்கு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(பரீத்)

அனர்த்த முகாமைத்துவத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு திருகோணமலை மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினால் நடத்தப்பட்டது.

அண்மைக் காலங்களில் அதிகரித்துவரும் அனர்த்த அபாயங்களிலிருந்து மக்களை திறனான வகையில் பாதுகாக்கும் பல நடவடிக்கைகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு கட்டமாக மேற்படி கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதன்போது, அவசரகால முன்னெச்சரிக்கை வழங்குவதில் பொலிஸாரின் பங்கு, அனர்த்த நிலமைகளில் சட்ட ஒழுங்குகளை சீரமைத்தல், அவசர வெளியேறல் நடவடிக்கைகளின் போது வீதி போக்குவரத்தைப் பேணுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி இணைப்பாளர் அ.யு.முறாத் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஆ.ஆ.முஹைஜிர் ஆகியோர் விரிவுரைகளை வழங்கினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X