2025 மே 08, வியாழக்கிழமை

திருமலையில் இளைஞர் ஆற்றல் அபிவிருத்தி திட்டம் அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலையில் இளைஞர் ஆற்றல் அபிவிருத்தி திட்டத்தை அமெரிக்க தூதர் அங்குராரப்பணம் செய்து வைத்தார்.

இளைஞர் ஆற்றல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலங்கை உயர்தகவல் தொழில்நுடபக் கல்வி -சமூக அபிவிருத்தித் திட்ட நிறுவனம் இலங்கையில் உளள அமெரிக்கத்தூதரகத்தின் உதவியுடன் திருகோணமலை மாவட்ட வர்த்தகம் - கைத்தொழில் சம்மேளனம் மற்றும் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ள நூறு இளைஞர், யுவதிகளுக்கு கணனி மற்றும் ஆங்கிலப் பயிற்சி நெறியை இலவசமாக வழங்கும் செயற்றிட்டத்தை இன்று காலை இலங்கைக்கும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அமெரிக்கத்தூதர் மிச்சேல் சிஸேன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
 
திருகோணமலை நகரில் வர்த்தகம் - தொழில்நுட்ப ஈநெற் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இத்திட்டத்தின் கீழ் இலவச கணனி மற்றும் ஆங்கிலம் புலமைப் பரிசல்களை பெறும் 100 இளைஞர் யுவதிகளுக்கு புலமைப்பரிசுகளை அமெரிக்கத் தூதர் வழங்கி வைத்தார்.

ஈநெற் கல்லூரியின் அதிபரும் திருகோணமலை மாவட்ட வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவருமான வ.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலாளர் க.திருச்செல்வம் வரவேற்புரை நிகழத்தினார்.

நாடு மற்றும் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் கணனி அறிவு மற்றும் ஆங்கில அறிவு பெற்ற இளைஞரர்கள் கைகளில் தான தங்கியுள்ளது என்று அமெரிக்க தூதர் உரையாற்றும்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X