2025 மே 08, வியாழக்கிழமை

மூதூர் அல் - ஹிலால் மத்திய கல்லூரி அதிபர் தென் கொரியா விஜயம்

Super User   / 2012 ஒக்டோபர் 31 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

மூதூர் அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர் யூ.என்.ஏ.கபூர் தென் கொரியாவில் இடம்பெறவுள்ள ஆசிய பசுபிக் வலய அதிபர்களுக்கான செயலமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக பயணம் செய்துள்ளார்.

ஆசிய பசுபிக் வலயத்தை சேர்ந்த 30 நாடுகளிலிருந்து 30 அதிபர்கள் இச்செயலமர்வுக்கு கலந்துகொள்ளவுள்ள நிலையில் இலங்கை சார்பாக அதிபர் கபூர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரி, திருகோணமல சென். ஜோசப் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப் பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

1985ஆம் ஆண்டில் பதுளை நேபியர் வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக முதலாவது நியமனத்தைப் பெற்ற இவர், 1999ஆம் ஆண்டில் இடம்பெற்ற அதிபர் போட்டி பரீட்சையில் சித்தியடைந்து அல் - ஹிலால் மத்திய கல்லாரியின் அதிபராக நியமிக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக இன்று வரை பணிபுரிந்து வருகின்றார்.

அதிபர் கபூர் கடந்த வருடம் சிறந்த அதிபருக்கான ஜனாதிபதி விருதை பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X