2025 மே 08, வியாழக்கிழமை

கருமலையூற்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Super User   / 2012 நவம்பர் 05 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கருமலையூற்று கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை கருமலையூற்று புதிய ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும்மான அமீர் அலி, கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபையர் ஆகியோரோடு இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்  பள்ளிவாசல் நிருவாகிகளும் ஊர் முக்கியஸ்தாகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மீன்பிடி தொழிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணி மற்றும் கருமலையூற்றுப் பள்ளிவாசல் முதலானவை சம்பந்தமாக ஆராயப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் நாளைய அமர்வின் போது கருமலையூற்று கிராம மக்களது பிரச்சினை சம்பந்தமாக தனிநபர் பிரேரணையொன்றை மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X