2025 மே 08, வியாழக்கிழமை

கருமலையூற்று பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பது என மாகாண சபையில் தீர்மானம்

Super User   / 2012 நவம்பர் 06 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

கருமலையூற்று கிராம மக்களின் பள்ளிவாசல், காணி மற்றும் மீன்பிடி தொழில் முதலானவை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பது என கிழக்கு மாகாண சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாகாண சபையின்  இன்றைய அமர்வில் முன்னாள் அமைச்சரும்  மாகாண சபை உறுப்பினருமான அமீர் அலியினால் கருமலையூற்று மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை சம்மத்தமாகவே மாகாண சபை ஏகமனதாகத் தீhமானித்துள்ளது.

கருமலையூற்று கிராமத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் புகழ்பெற்ற 'மஸ்ஜிதுல் றாபியா' பள்ளிவாசலை மக்களிடம் கையளிப்பதற்கும்;  காணி பிரச்சினையை தீர்த்து  வைப்பதற்கும் அம்மக்களது வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடித் தொழிலில் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு  கிழக்கு மாகாண சபை  தீர்மானித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X