2025 மே 08, வியாழக்கிழமை

முள்ளிப்பொத்தானையில் நடமாடும் சேவை

Super User   / 2012 நவம்பர் 06 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


தேசத்துக்கு மகுடம் - 2013 கண்காட்சியை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மட்டத்திலான நடமாடும் சேவை இடம்பெற்று வருகின்றன.

இந்த வகையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நடமாடும் சேவையொன்று  இன்று செவ்வாய்கிழமை முள்ளிப்பொத்தானை சாலியபுர பொதுக் கட்டிடத்தல் நடைபெற்றது.

தம்பலகாமம்  பிரதேச செயலாளர் டீ.ஆர்.டீ.தசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறப்பு, பிறப்பு மற்றும் விவாக பதிவாளர் திணைக்களம், ஆட்பதிவு  திணைக்களம், மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் போன்ற பல திணைக்களங்கள் கலந்துகொண்டன.

இந்த நடமாடும் சேவையின் ஊடாக மூலம் சுமார் 800 பேர் நன்மையடைந்துள்ளனர் எனக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X