2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு

Super User   / 2012 நவம்பர் 07 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையொன்று திருகோணமலை நிலாவெளி கடற்கரை ஹோட்டலில் இன்று புதன்கிழமை ஆரம்பமானது.

மாகாண சபை முறைமை தொடர்பில் உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வகையிலான பல்வேறு விளக்கவுரைகளும் கலந்துரையாடல்களும் இந்த பயிற்சிப் பட்டறையில் இடம்பெறுகின்றன.

பயிற்சிப் பட்டறையின் இன்றைய ஆரம்ப நிகழ்வில் - கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

இன்றைய பயிற்சிப் பட்டறையில், 'மாகாண சபைகள் - பொதுமக்களின் அவாவினை நிறைவேற்றுவதற்கான ஒரு பயனுள்ள கருவி' மற்றும் 'உள்ளுராட்சியில் மாகாண சபையின் வகிபாகம்' எனும் தலைப்புகளில் விரிவுரைகள் இடம்பெற்றன.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மற்றும் அமைச்சர்களான ஹாபீஸ் நஸீர் அஹமட், எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க மற்றும் சபையின் ஏனைய உறுப்பினர்கள் பங்குபற்றுநர்களாகக் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X