2025 மே 10, சனிக்கிழமை

திறன் விருத்திப் பயிற்சி நெறி

Kogilavani   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களில் வாழும்  இளைஞர் யுவதிகளுக்கு NVQ தரம் 3 இற்கான கட்டிட நிர்மாணவினைஞர் மற்றும் மரவேலைவினைஞர் ஆகிய துறைகளில் திறன் விருத்திப் பயிற்சி நெறி  முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு திருகோணமலை நிலாவெளியில் அமைந்திருக்கும் சேவா லங்கா மன்றத்தின் பயிற்சி நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சிரேஷ்ட செயலாளர் டீ.எம்.எஸ்.அபயகுணவர்த்தனவால் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி நெறியானது 40 மாணவர்களைக் கொண்ட 9 மாதகால முழு நேர பயிற்சியாகும். 

இந்நிகழ்வில், இப்பயிற்சிக்கான நிதியுதவியை வழங்கும் ஜப்பான் நிறுவனமான ஜாடி மற்றும் ஜெய்கா நிறுவனங்களின் உத்தியோகத்தர்களான கிரோடா தனகா, கிடோயுகி டாகிடா, கிரோயுகி அபே, சுன்சுகே குதிஹரா, பேஜ் வின்ட்ஜ் ஜப்பான் நிறுவன உத்தியோகத்தர் அயா சொனடா, அஒபா மொறிடா, மற்றும் சேவா லங்கா மன்ற உத்தியோகத்தர்கள், சர்வ மன்றத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X