2025 மே 10, சனிக்கிழமை

திருமலை மாவட்ட உள்ளுராட்சி சபை தலைவர்களின் அமைப்பு உதயம்

Super User   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


உள்ளுராட்சி சபைகளில் நிருவாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை கலந்துரையாடினர்.

கிண்ணியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் திருமலை, கிண்ணியா, தம்பலகாமம், மூதூர், கந்தளாய், குச்சவெளி, மொறவௌ, வெருகல், சேருவில, பதவிசிரிபுற, கோமரங்கடவெல, ஈச்சலம்பற்று மற்றும் திருகோணமலை பட்டிணமும் சூழலும் ஆகிய  உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி மன்றங்களில் நிலவும் பிரச்சினைகள், தீர்வு காணப்படக்கூடிய பிரச்சினைகள், முக்கியமாக தீர்வுகள் எட்டப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டன.

'திருமலை மாவட்ட உள்ளுராட்சி சபை தலைவர்களின் அமைப்பு' என்ற அமைப்பும் இதன்போது ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தலைவராக கிண்ணியா நகர சபை  தலைவர் டாக்டர் எம்.எம். ஹில்மி தெரிவுசெய்யப்பட்டார்.

ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வது, நிருவாக ரீதியிலான பிரச்சினை சம்பந்தமாக வருகைதந்த உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் ஒப்பமிட்ட மகஜர் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பல் ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X