2025 மே 10, சனிக்கிழமை

மூதூரிலும் காட்டு யானைகள் அட்டகாசம்; விவசாயியொருவர் காயம்

Super User   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

மூதூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ள பள்ளிக்குடியிருப்பு கிராமத்தினைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 37 வயது நிரம்பிய பரமசிவன் தேவராசா என்பவர் யானை ஒன்றினால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் தனது நெற்செய்கையை காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக இரவுக்காவலில் தனது வயலில் அமைக்கப்பட்டடிருந்த காவல் குடிலில் இருந்த சமயம் திடீரென்று பிரவேசித்த காட்டு யானை அவரது குடிலை தூக்கி எறிந்தது. அவர் யானையிடமிருந்து தப்பி ஓட முயற்சித்தபோது யானை தனது தும்பிக்கையால் தேவராசாவை அலாக்காக தூக்கி நிலத்தில் வீசியுள்ளது.

அருகில் உள்ள வயல்களில் காவலில் இருந்தவர்கள் இவரின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்து காயமடைந்தவரை முதலில் தோப்பூர் அரசாங்க வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காட்டு யானைகளின் அட்டகாசம் மூதூர் பிரதேசத்திலும் பரவலாக அதிகரித்திருப்பதாக மக்கள், பெரும்பாலும் விவசாயிகள் தங்கள் பிரதேச செயலாளர்களிடம் முறையிட்டுள்ளனர்.

அண்மைக்காலத்தில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளத்தின் பின்னர் காட்டு யானைகளின் அட்டகாசம் திருகோணமலை மாவட்டத்தில் பரவலாக அதிகரித்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X