2025 மே 10, சனிக்கிழமை

பள்ளிவாசல்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தௌபீக் எம்.பி

Super User   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள பள்ளிவாசல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

"நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மீது இனந்தெரியாத குழுவினர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பள்ளிவாசல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த பல தசாப்தங்காக எந்த கட்சியினர் மாறி மாறி ஆட்சி செய்தாலும் அரசாங்கம் அமைக்கும் கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன் தனி நாடு கோரி போன்ற எந்தவித கோரிக்கையினையும் முஸ்லிம்கள் அரசாங்கத்திடம் விடு;க்கவில்லை.
எப்போதும் முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்படுகின்றனர். இவ்வாறான நிலையில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது கலலை அளிக்கும் விடயமாகும்.

இந்த நடவடிக்கைகளின் ஊடாக அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களுக்கு தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பமுள்ளது. இதனால் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X