2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு நடைபவனி

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


ஒலிம்பிக் 2014ஐ  குறிக்கும் முகமாக  விழிப்புணர்வு நடைபவனியொன்று திருகோணமலையில் இன்று நடைபெற்றது. திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து பிரதான வீதி, புகையிரத நிலைய வீதி. ஏகாம்பரம் வீதி. மணிக்கூண்டு கோபுரம். டொக்கையாட் வீதி, வழியாக கடற்படை நூதனசாலை முன்றலை ஊர்வலம் சென்றடைந்தது.

மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும். ஊர்வலத்தில் பங்கு கொண்டவர்களில் இருந்து அதிர்ஷ்டசாலிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பாக பங்கு கொண்ட பெருமையை தேடித்தந்த எஸ்.எல.பி.ரோசா,விமலசேன பெரோரா ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.  27 பாடசாலைகளைச் சேர்ந்த 800 மாணவர்கள் நடை பவனியாகவும், 200 மாணவர்கள் துவிச்சக்கர வண்டி ஊர்வலத்திலும் பங்கு கொண்டார்கள்.

முப்படையினரின் பாண்ட் வாத்திய இசை நிகழ்வும், கலை நிகழ்வுகளும் ஊர்வலத்தின்; முடிவில் அரங்கேற்றப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஆதிரயவதி கலபதி, பிரியந்த பத்திரனஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X