2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

25 வருட மாக புனரமைக்கப்படாத வீதிகள்

Freelancer   / 2023 நவம்பர் 21 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்   
 
திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட இரண்டாம் குலனி பகுதியில் கடந்த இருபத்தைந்து வருடகாலமாக வீதி புனரமைத்து தரவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
அப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கும் மக்கள்  அம்மன் கோவில் வீதி, திருவள்ளுவர் வீதி, குளக்கோட்டன் வீதி, சேர்ச் வீதி, உப்பார் வீதி,  போன்ற வீதிகள் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை பள்ளமும் படு குழியுமாகவும் உள்ளதாக தெரிவிக்கின்றனர் .
 
அவ் வீதி ஊடாக செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் எனப் பலரும்  பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
 
அரசியல்வாதிகள் பொய் வாக்குகளை கொடுத்து அப்பகுதி மக்களை ஏமாற்றியதாகவும் குறித்த வீதி சம்பந்தமாக கந்தளாய் பிரதேச செயலகத்துக்கு ஆளுநருக்கு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்த போதும் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி கந்தளாய் பேராறு வீதிகளை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .