2025 மே 19, திங்கட்கிழமை

அரிசிமலை விவகாரம்: கிழக்கு பொலிஸ்மா பிரதி அதிபருக்கு கடிதம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், பதுர்தீன் சியானா

புல்மோடடை அரிசிமாலை பிரதேசத்தில் கடந்த 12ஆம் திகதி புல்மோட்டை அரிசிமலை பௌத்த பிக்கு  பானா முறதிலக  வன்ஸவின் உதவியுடன், கொழும்பில் இருந்து புல்மோடடை அரிசிமலை பகுதியில் அமைந்துள்ள ஜகுபர் காலித்  என்பவரின் வீட்டுக்கு  விஜயம் மேற்கொண்டு தாக்கியமை தொடர்பாக  புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து இதுவரை எவ்“வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்  மாகாண சபை குழு  தலைவருமான ஆர் .எம் .அன்வர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

குறித்த அரிசிமலை பௌத்த பிக்குவுக்கு  எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் இற்றை வரைக்கும்  இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் இன்றி பொலிஸாரும் இருப்பது  சட்டம் சரியாக இடம்பெறுகின்றதா?

அத்துடன், குறித்த  பிக்குகள் மற்றும் காடையர்கள் அடங்கிய கூட்டம் சட்டவிரோதமாக செயற்பட்டுவிட்டு  புல்மோடடை முஸ்லிம்களை அரிசிமலை பௌத்த விகாரையை  தாக்கினார்கள். அதற்கு பின் புலமாக மாகாண சபை  உறுப்பினர்  அன்வர் இயங்கினார் என்று சிங்கள வலை தளங்களில்  போடப்பற்றிருப்பது மன வேதனை அளிப்பதாக உள்ளது.

இது தொடர்பில்  நல்லாட்சி அரசாங்கம் கவனத்தில் எடுக்கவேண்டும். இந்த சபையில் உள்ள சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் மாகாண சபை உறுப்பினர்கள் உண்மை நிலையை  அறிந்து கொள்ளவேண்டும்.  மேலும் சட்டத்தை கையில் எடுக்கும் தனி மனிதர்கள் குறித்து,  நல்லாட்சி அரசாங்கம்  ஒரு  நெறியான பொறிமுறை ஒன்றை உருவாக்கி  அதனை கையாளவேண்டும் என்றார்.

குறித்த கேள்விக்கு பதில் அளித்த சபை  தவிசாளர் கலப்பதி,

இது  விடயமாக கிழக்கு மாகாணத்துக்கு  பொறுப்பாகவுள்ள பிரதி போலிஸ் மா அதிபருக்கு சபை தீர்மானமாக  கடிதம் ஒன்றை அனுப்புவதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X