Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேசங்களில் அளவை மற்றும் நிறுவைகளில் மோசடி செய்த 28 பேரை இன்று 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் பரிசோதகர் பி.ராஜேஸ்வரன், கடந்த வாரம் மேற்கொண்ட திடீர் பரிசோதனைகளின் போது, கந்தளாயில் 4 வியாபாரிகளும் கிண்ணியாவில் 24 வியாபாரிகளுமே இம்மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டவர்களாக இனங்காணப்பட்டதாகக் கூறினார்.
வியாபார நடவடிக்கைகளில் அளவை மற்றும் நிறுவைக்காகப் பயன்படுத்தும் உபகரணங்களை உரிய காலத்தில் முத்திரையிடப்படாமை, உபகரணங்களில் சீல் அகற்றப்பட்டிருந்தமை,
அனுமதியற்ற அளவை மற்றும் நிறுவை உபகரணங்களைப் பயன்படுத்தியமை போன்ற மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறிய பரிசோதகர் பி.ராஜேஸ்வரன், தற்போது கந்தளாய் பிரதேசச் செயலகத்தில் நடைபெற்று வரும் அளவை மற்றும் நிறுவை உபகரணங்களை முத்திரையிடும் பணிகள்
இம்மாதம் 9ஆம் திகதி வரை இந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும்
அளவை மற்றும் நிறுவை உபகரணங்களையும் சரிபார்த்து முத்திரையிட்டு, வியாபாரிகள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை சட்ட ரீதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
1 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
19 Jul 2025