Gavitha / 2015 நவம்பர் 25 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
குச்சவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட குச்சவெளி கோட்ட பாடசாலைகளான புல்மோட்டை, புடவைக்கட்டு, குச்சவெளி, இறக்ககண்டி, நிலாவெளி போன்ற பாடசாலைகின் நீண்டகால ஆசிரியர் மற்றும் பற்றாகுறை பௌதீக வளங்கள் தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை (23) கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மட்டின் தலைமையில், மாகாண சபை உறுப்பினர் (குழு தலைவர் ) ஆர்.எம்.அன்வரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
ஆசிரியர் பற்றாகுறை, முறையற்ற ஆசிரியர் இடமாற்றம் போன்ற பல குறைபாடுகள், இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அடுத்த ஜனவரி முதல் ஆசிரியர் இடமாற்றம் குறித்து அவதானமாக இருப்பதாகவும் குறித்த பாடசாலைகளுக்கு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்துடன் மாகாண சபையின் கீழ் சுமார் 300க்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கபடுள்ளதாகவும் அதிலும் குறித்த மாவட்டத்தில் உள்ளவர்களைச் சொந்த மாவட்டத்திலே நியமிப்பதாகவும் தீர்மானிக்கபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago