2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஆமடில்லாவை வேட்டையாடிய இருவர் கைது

Janu   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில் , சட்டவிரோத கட்டுத்துவக்கு மற்றும்  வேட்டையாடப்பட்ட ஆமடில்லா (அளுங்கு) எனும் மிருகம் ஆகியவற்றுடன் இருவர் செவ்வாய்க்கிழமை (19)   கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சேருநுவர - தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 53,45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது கட்டுத்துவக்குடனும் வேட்டையாடப்பட்ட அலுங்கு மிருகத்துடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு    மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X