2025 மே 19, திங்கட்கிழமை

ஆயுதங்கள் மீட்பு

George   / 2016 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை- மொறவெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் மரமொன்றுக்குக் கீழே ஆயுதங்கள் காணப்படுவதாக விமானப்படையினர் வழங்கிய தகவலையடுத்து, அவ்விடத்திற்குச்சென்ற பொலிஸார், இன்று (31) மாலை ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

டி-56 துப்பாக்கி ரவைகள் 97, எம்.பீ.எம்.ஜீ ரவைகள் 5, ஏ.ஏ.எம்.ஜி ரவை மற்றும் டி 56 டூல் கிட் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தின் ஆலோசனைக்கமைய செயழிலக்கச் செய்யவுள்ளதாக  மொறவெவ பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X