2025 மே 21, புதன்கிழமை

ஆரோக்கிய நடைபவனி

Thipaan   / 2016 ஜூன் 01 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

தேசிய போசாக்கு வாரத்தை முன்னிட்டு, திருகோணமலை வலயக்கல்விப் பணிமனையும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 'ஆரோக்கிய நடைபவனி', இன்று காலை இடம்பெற்றது.

திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியிலுள்ள ராஜகீய சிங்கள மஹா வித்தியாலயத்துக்கு முன்னால், காலை 8.30க்கு ஆரம்பிக்கப்பட்ட இந்நடைபவனி, ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலயம் வரை இடம்பெற்றது.

 'அழகான உடலமைப்புக்கு அளவோடு உண்ணுங்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ், மக்களை விழுப்பூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நடைபவனியில், தினமும் தானியங்கள், கீரை, பழவகைகளை உண்போம் என்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் வருகை தந்தனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய திருகோணமலை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அனுசியா ராஜ்மோகன்,

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இவ்வாறான வேலைத்திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. பாடசாலை மாணவர்கள் ஊடாக, பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதத்திலேயே மாணவர்களைக் கொண்டு இதை நடத்தினோம்.

மாணவர்களாகிய நீங்கள் இந்தச் சாப்பாட்டு பழக்கத்தினைத் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். அப்படியிருந்தால் தான், நோயில்லாமல் வாழ்க்கையைக் கழிக்க முடியும்' என தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X