2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆலயத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2017 ஜனவரி 29 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில் எல்லைக் கிராமத்தில் அமைந்துள்ள தென்னமரவாடி வரிசித்தி விநாயகர் ஆலயத்தைப் புனரமைத்துத் தருமாறு, அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இம்மக்கள் இடம்பெயர்ந்து முல்லைதீவு மாவட்டத்துக்குச் சென்று அகதி முகாம்களில் வாழ்ந்து, மீண்டும் 2011ஆம் ஆண்டு சொந்தக் கிராமமான தென்னமரவாடி கிராமத்துக்கு மீள்குடியேற்றப்பட்டனர்.

இக்கிராமத்தில் முக்கியமாகக் காணப்படுகின்ற வரிசித்தி விநாயகர் ஆலயம் முழுமையாகச் சேதமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தினால் ஆலயத்தைப் புனரமைப்பதற்காக 40 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஆலயத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு பெறாத நிலையில் மக்கள் சமய வழிபாட்டில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதாகவும் இந்த ஆலய நிர்மாணப்பணிகளைக் கூடிய விரைவில் நிறைவு செய்து தருமாறும், கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .