2025 மே 15, வியாழக்கிழமை

ஆள்மாராட்டம் செய்தவருக்கு சிறை

Niroshini   / 2017 மே 06 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை நீதிமன்றில் ஆள்மாராட்டம் செய்த குற்றச்சாட்டின் பேரில், இளைஞன் ஒருவருக்கு,  ஐந்து மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று உத்தரவிட்டார்.                               

ஈச்சந்தீவு, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனுக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.                    

சாராய வழக்கொன்றின் போது, வழக்கின் எதிராளி வெளிநாடு சென்ற நிலையில், குறித்த வழக்கு நீதிமன்றில் நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, எதிராளியை வழக்கு பெயர் கூறி அழைக்கும் போது குறித்த இளைஞன், நீதிவான் முன்னிலையில்ஆஜரானார்.                        

பின்பு பொலிஸார் குறித்த வழக்கின் எதிராளி இவர் இல்லை என நீதிவானின் கவனத்துக்குகு கொண்டுவந்ததையடுத்து, குறித்த நபருக்கு ஐந்து மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .