Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2017 மே 06 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா அல் அதான் வித்தியாலய மாணவன் ஒருவனிடம் நேற்று வெள்ளிக்கிழமை (05) இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் கிண்ணியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கிண்ணியா மகரூப் நகரை சேர்ந்த சதாத் முகம்மது ருஸ்தி (வயது 11) என்ற இந்த மாணவன் அல் அதான் வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கிறான். இம்மாணவன் பாடசாலை முடிந்து வரும்போது வெள்ளைக் காரொன்றில் வந்த சிலர், மாணவனை மறித்து இரத்தம் எடுத்ததாகத் தெரிய வருகின்றது.
இதனை அறிந்த இவனது தந்தை, பாடசாலை அதிபரைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.
பாடசாலையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என அதிபர் அறிவிக்கவே, பெற்றோருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடன் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டதோடு, சிறுவனும் கிண்ணியா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டான்.
இச்சிறுவன், தற்போது மேலதிக பரிசோதனைக்காகவும் சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெறுவதற்காகவும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாக, கிண்ணியா தள வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.எச்.சமீம் தெரிவித்தார்.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இச்சம்பவம் கிண்ணியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலில் ஏதும் நோய்க் கிருமிகள் புகுத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 May 2025