2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இறால்குழிப் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் உட்பட 4 கோரிக்கைகள் முன்வைப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, மூதூர் பிரதேசத்துக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின்போது, இறால்குழிப் பிரதேச முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்ததாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

மேற்படி கூட்டம், மூதூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்;க்கிழமை (30) நடைபெற்றது.

மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட தக்வா நகர் வட்டம் கிராம மக்களின் குடியேற்றம், தோப்பூர் -கள்ளம்பத்தை கிராமத்தில்  வீட்டுத்திட்டத்தை பொதுமக்களிடம் கையளித்தல், தோப்பூர் -இக்பால்நகர் உள்ளைக்குளம் முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினையை தீர்த்துவைத்தல் ஆகியவை தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இக்கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இக்கூட்டத்தின்போது பணிப்புரை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைகளுக்கான தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X