2025 மே 17, சனிக்கிழமை

உப்புவெளியில் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 28 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

உப்புவெளிப் பொலிஸ் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை   (27) மாலை  பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே பொதுமக்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

மேலும், தங்களின் கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்களை வழங்கினாலும், அவர்கள் வரத் தாமதமாகின்றனர். இதற்கிடையில், சந்தேக நபர்கள் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுகின்றனர். ஆகவே, தகவல் கிடைத்தவுடன் அவ்விடத்துக்கு வருகை தந்து நடவடிக்கையை எடுக்குமாறும்  பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்த பொலிஸார், எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்வதுடன், இரவு வேளைகளிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .