2025 மே 15, வியாழக்கிழமை

உப்பளத்தால் சிறுகடல் மீனவர்கள் பாதிப்பு

Princiya Dixci   / 2017 மே 16 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பளத் திட்டமொன்றினால், சிறுகடல் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் இந்நிலை நீடிக்குமானால், பாரம்பரிய கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுமெனவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், பலருடைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட கும்புறுப்பிட்டி உப்பளத்தால், அப்பகுதிகளிலுள்ள சிறுகடல் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக, பல போராட்டங்களை முன்னெடுத்தபோதும், அதனால் கடந்த அரசாங்கத்தின் போது, எவ்விதப் பயனும் கிட்டவில்லை.

இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் சிறுகடல் மீனவர்களுக்கு, கொடுவா மீன் வளர்ப்பு திட்டம் மற்றும் நவீன இறால் வளர்ப்புத் திட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்துவதாக ஒப்புதல் வழங்கியிருந்த போதும், இன்றுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த மீன்வளர்ப்புத் திட்டத்தையும் இன்று இந்த சிறுகடல் மீனவர்கள் எதிர்க்கின்றனர். தற்போது, 3 மாதங்களுக்கு மேல் தாம் இயற்கையாக பிடித்து வந்த இறால், நண்டுத் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படும் விதத்தில், அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளதுடன், கடல் நீரேரியில் வௌ்ளத்தை விடாது தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையால், கடல் நீரின் உப்பு செறிவாகும் பட்சத்தில், இறால் மற்றும் நண்டு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, இத்தொழிலை நம்பி வாழும் பல நூறு சிறுகடல் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுடைய இப்பிரச்சினை தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்வரும் குச்சவெளி பிதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போது, இதற்குரிய தீர்வு கிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .