Janu / 2024 ஜூலை 21 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணாமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டாம்புளி வயல் நிலப் பகுதியில் இருந்து எரிந்த நிலையில் சடலமொன்று சனிக்கிழமை (20) மாலை மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர் .
திருகோணமலை அன்பு வழிபுரத்தைச் சேர்ந்த 53 வயதுடைய சிவலிங்கம் ஜெயசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
விவசாயி ஒருவர் தனது வயலுக்குச் சென்ற வேளையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டதையடுத்து இது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த தம்பலகாம பொலிஸாரால் சடலத்தை மீட்டுள்ளதுடன் குறித்த சம்பவ இடத்துக்கு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்டுள்ளனர் .
மேலும் , குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
ஏ.எச் ஹஸ்பர்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .