2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

ஐ.தே.கவுக்குள் ‘இனவாதத்துக்கு இடமில்லை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இனவாதச் செயற்பாடுகளுக்கு இடமில்லையென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

அண்மையில், முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை, ஐ.தே.கட்சி தவிசாளர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் கபீர் காசிமினால் பிரதமரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் பின்னர் அங்கிருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்கள் என்றும் அதனடிப்படையில், அந்தத் தவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லையென உறுதிபடக் குறிய அவர், அவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோமென்றும் ஐ.தே.க என்பது நாட்டிலுள்ள ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமான கட்சியல்ல எனக் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாறான பல சம்பவங்கள் கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ளன எனச் சுட்டிக்காட்டிய அவர், ஆனால் ஊடகங்களுக்கு அது இனவாதச் செயலாக தென்படுவதில்லையெனத் தெரிவித்ததுடன், அதை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுப்பதில்லையென்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X