Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாணத்தில் கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகியவற்றில்; அரச ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு கிழக்கு மாகாண சபை அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கோரிக்கை விடுத்தார்.
கிழக்கு மாகாண சபையின் 62ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்றது. இதன்போது தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்படி கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் 120 மாகாண வைத்தியசாலைகளும் 07 மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளும் உள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 45 பிராந்திய சுகாதார காரியாலயங்களும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் மிகக்கூடுதலான நோயாளிகளும் கிழக்கு மாகாணத்திலே உள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண மக்கள் மருந்துகளை கொள்வனவு செய்வதில் தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் கிடைக்காத மருந்தகளை கொழும்பு போன்ற தூர இடங்களுக்குச் சென்று கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதனால் குறித்த பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகங்களை திறப்பதற்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய சுகாதார அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மருந்து விற்பனை நிலையங்கள் போதைப்பொருள் விற்பனை நிலையங்களாக மாறிவருகின்றன. இதனால் தற்போது கிழக்கு மாகாணத்தில் போதைவஸ்துப் பாவனை அதிகரித்துக் காணப்படுகிறது.
இவ்வாறான தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் வைத்தியரின் ஆலோசனையின்றி மருந்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இது ஆரோக்கியமான விடயமல்ல. இதனால் நோயாளர்களுக்கு போதிய திருப்தியும் காணப்படுவதில்லை. ஆகவே மேற்குறித்த பிரதேசங்களில் அரச ஒசுசல நிலையங்களை திறப்பதன் மூலம் மக்களைப் பாதுகாத்துக்கொள்ளவதுடன் மக்களுக்கு திருப்திகரமான சேவைகளையும் வழங்க முடியும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025