2025 மே 19, திங்கட்கிழமை

காணி பிரச்சினைகளை எம்மிடம் கூறுங்கள்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

குடும்பத்தில் பிரச்சினைகள் இடம்பெறாதிருக்க வேண்டுமாக இருந்தால் குடும்பத் தலைவர்கள் உயிரோடிருக்கும் போது தமது சீவியத்துக்கு பிறகு பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய காணிகளை எழுதி வைத்தால் முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என மூதூர் சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி எம்.பைஸர், தெரிவித்தார்.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் அலுவலகத்தினால் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள் போன்றோருக்கு தோப்பூர் தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையில் வைத்து நேற்று (19) சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தற்போது நாட்டில் காணி சம்மந்தமான முரண்பாடுகளும் இளம் வயது திருமணங்களும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக காணி சம்மந்தமான பிரச்சினையை  எடுத்துக் கொள்வேமானால் பெற்றோர்கள் தமது சீவியத்துக்கு பின்னர் காணிகளை பிள்ளைகளுக்கு பிரித்து எழுதாது மரணிக்கின்ற போது இதனால் பிள்ளைகளுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு நீதிமன்றங்களுக்கு வருவதை நாம் அவதானிக்கின்றோம்.

இவ்வாறு பிரச்சினைகள் இடம்பெறாதிருக்க வேண்டுமாக இருந்தால் குடும்பத் தலைவர்கள் உயிரோடிருக்கும் போது தமது சீவியத்துக்கு பிறகு பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய காணிகளை எழுதி வைத்தால் முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

இதே வேளை உங்களது பிரதேசத்தில் தீர்க்கப்படாத பல காணி பிரச்சினைகள் இருந்தால் எங்களிடம் வந்து தெரிவித்தால் இலவசமாக உங்களுக்கு வழிக்காட்ட எமது சட்ட உதவி ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • vcdc Thursday, 22 September 2016 03:01 PM

    Is there anyone to help for Valaichenai people

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X