2025 மே 19, திங்கட்கிழமை

கிராஅத் போட்டி

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம் நடத்தும் கிராஅத் போட்டி, நாளையும் நாளை மறுதினமும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கான அனைத்துப் போட்டிகளும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெறும். பெண்களுக்கான அனைத்து போட்டிகளும் நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 8.00மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போட்டி நடைபெறும் அன்றைய தினம் நண்பகல் 1 மணிக்கு முன்னர் முதற்கட்ட தெரிவுகள் அனைத்தும் நிறைவடைந்து, 2 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. 800ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதால் காலை 9 மணிக்கு முன்னர் அனைத்துப் போட்டியாளர்களும் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். பதிவு செய்யத் தவறுகின்றவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.

போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான அனுமதிக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போட்டிக்கு விண்ணப்பித்து இதுவரை கடிதம் கிடைக்காத போட்டியாளர்கள் போட்டிகள் நடைபெறும் தினத்தில் விண்ணப்பித்ததை உறுதிப்படுத்தி போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

போட்டிகள் 20 வயதுக்கு கீழ்பட்ட ஆண்கள் பெண்கள் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் சர்வதேச மட்ட கிராஅத் போட்டிகளில் கலந்துகொண்ட காரி காரிஆக்களுக்கான போட்டிகளாக இடம்பெறும்.

இப்போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் நினைவுப் பேருரையும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை கொழும்பு 2 இல் அமைந்துள்ள தாமரைத் தடாகம் கேட்போர் அரங்கில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X