2025 மே 19, திங்கட்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை சேருநுவர பகுதியில், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மூவர் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின்  வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.  

இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை 6.30 மணியளவில், குறித்த மூவரும் வயலுக்குச் சென்ற போது, பனை மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டில் பனம் பழம் விழுந்ததால் குளவிக்கூடு கலைந்து அவர்கள் மூவரையும் துரத்தி கொட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சேருநுவர, கல்லாறு பகுதியைச் சேர்ந்த எச்.ஏ.சோமபால (வயது 32), டபிள்யூ.பி.எரங்க (வயது 30),  ஜி.எல்.குனசேகர (வயது 47) ஆகிய மூவருமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X