2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதம் நிறைவு

Suganthini Ratnam   / 2016 மே 05 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்கள் 11 நாட்களாக சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், தமக்கு எவரும் சிறந்த தீர்வைத் பெற்றுத் தரவில்லை என்று தெரிவித்து நேற்று புதன்கிழமை மாலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதான கதவை மூடி சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கல்வி அமைச்சில் கடமையாற்றிய அதிகாரிகளுக்கு வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் பொலிஸரின் உதவியை நாடியபோது நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதுடன்,  கதவைத் திறக்குமாறும் தொண்டர் ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக பொலிஸாருக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கதவை திறக்கும் படி தொண்டர் ஆசிரியர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதனை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவை பெற சென்ற நேரத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி அவ்விடத்துக்கு வருகை தந்தார். இதன்போது, கிழக்கு மாகாண அமைச்சரவையில் தாம் கலந்தாலோசித்து நிரந்தர நியமனங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அவர்  தெரிவித்தார்.

அதன் பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் கல்வி திணைக்களத்தின் கதவினை திறந்து தமது போராட்டத்தை நிறைவு செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .