Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பெண்ணை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (12) உத்தரவிட்டார்.
கிண்ணியா, சூரங்கல் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுப் பெண்ணுக்கு இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலை அடுத்து சுற்றிவளைப்பு மேற்கொண்ட பொலிஸார், குறித்த பெண்ணிடமிருந்து 8 கிராம் கேரளா கஞ்சாவைக் கைப்பற்றினர்.
கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் தற்போது பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை திருகோணமலை, மாவட்டத்தில் மொரவெவ பொலிஸ் பிரிவில் ரொட்டவெவ, நாமல்வத்த மற்றும் மூதூர், கிண்ணியா போன்ற பகுதிகளில் அதிகளவில் கேரளா கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும், கேரளா கஞ்சா மற்றும் ஹெரோய்ன் விற்பனை செய்யும் இடங்களை விசேட பொலிஸ் அதிரடிப்படை உதவியுடன் சுற்றிவளைப்புகள் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
23 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago