2025 மே 16, வெள்ளிக்கிழமை

கடலில் நீராடியவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 30 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்

திருகோணமலை அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நீராடிய இளைஞர் ஒருவரின் சடலம் ஜமாலியா கடற்கரையில் இன்று (30) காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்கள் 6 பேர் சேர்ந்து கடலில் நீராடுவதற்காகச் சென்றிருந்தனர். இந்நிலையில், அவர்களில் 3 பேர் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டார்.
மற்றைய இளைஞரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .