2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03)  இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில்  உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எம்.நஸார் (60 வயது) எனவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து கட்டுத்துவக்குடன் சென்ற போது, குறித்த துவக்கு தானாகவே வெடித்தமையால் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அதிக இரத்தப்போக்குக் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குடும்பஸ்தரின் சடலம்,  திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இம் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X