2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Janu   / 2024 ஜூலை 03 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, இலங்கை வங்கியின் பிரதான கிளைக்கு முன்பாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் சம்பள உயர்வைக் கோரி அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை புதன்கிழமை (03) முன்னெடுக்கப்பட்டது .

இதன்போது “அரச வங்கி ஊழியர்களுக்கு வரிச்சுமைக்கு ஏற்ற சம்பளம் உடன் பெற்றுத்தருக”, “அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கை கத்தரிப்பை உடன் சரி செய்க”, “பணிப்பாளர் சபைகள் பரிந்துரைத்த அரச வங்கிகளின் சம்பள அதிகரிப்பை உடன் பெற்றுத் தருக” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலையில் உள்ள அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கிராம அபிவிருத்தி வங்கி மற்றும் HDFC வங்கி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

 அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .