2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கவிதை நூல் அறிமுக விழா

Freelancer   / 2022 மார்ச் 01 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்)

'அன்பின் பாதை சமூகத்தின்' எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் நடத்திய கவிஞர் வேலனையூர் ரஜிந்தனின் 'பேரன்பின் படிமங்கள்' கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்ட திருகோணமலை உயர் தொழில்நுட்பக் கல்லூரி சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர் தங்கராசா ஜீவகன் மற்றும் திருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய ஆதீனகர்த்தா பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் ஆகியோர் முதற்பிரதி பெற்றனர்.

நூல் நயவுரையை கவிஞர் ஷெல்லிதாசன், கவிதாயினி பானு சுதாகரன் ஆகியோர் வழங்கினர். (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X