Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
காட்டு யானைகளின் அட்டகாசத்தில் இருந்து தங்களை மீட்குமாறு கோரி, திருகோணமலை, ஹொரவ்பத்தான பிரதான வீதியை மறித்து, மகாதிவுல்வெவ பிரதேச மக்கள், இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டு யானைகளின் தொல்லைகளால் தங்களது வீடுகள் சேதமாக்கப்படுவதுடன், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைகள் நாசமாக்கப்படுவதாகவும் தாமும் தாக்குதலுக்கு உள்ளாவதாவும் தெரிவித்தே, மகாதிவுல்வெவ பாடசாலைக்கு அருகில் 200க்கும் மேற்பட்ட மக்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், 12 நண்பகல் மணி வரைத் தொடர்ந்தது.
காட்டு யானைகளின் தொல்லைகள் குறித்து, வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை என, ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
இவ்வார்ப்பாட்டத்தின் போது, பிரதான வீதியை மறித்து, வாகனங்களைச் செல்ல விடாது பொதுமக்கள் தடுத்து நிறுத்தியமையால், வாகன நெரிசல் ஏற்பட்டது.
இருந்தபோதிலும், மொறவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்க, காட்டு யானைகள் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திய மிக விரைவில் சிறந்த தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறியதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆர்ப்பாட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தனர்.
இதேவேளை, தங்களுக்குச் சிறந்த தீர்வைப் பெற்றுத்தராவிட்டால் இன்னும் ஒரு வார காலத்துக்குள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
2 hours ago
2 hours ago