Janu / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சிவக்கொழுந்து மீனா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப பொருளாதார தேவைகளுக்காக கடந்த 2023ஆம் ஆண்டு இவர் குவைத் நாட்டுக்கு சென்றிருந்தார். அங்கு பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு, பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஊடாகக் குடும்பத்தினர் உரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அ. அச்சுதன்
20 minute ago
2 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
9 hours ago
9 hours ago