2026 மார்ச் 23, திங்கட்கிழமை

செயற்கை கால் அளவெடுக்க திருகோணமலைக்கு குழு விஜயம்

Gavitha   / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

'றோட்டரி மாவட்டம்- 2982 நம்பிக்கைத் திட்ட இந்திய அணி, பாண்டிச்சேரி, இந்தியா', செயற்கை கால்கள் பெறும் நோயாளிகளுக்கான முறையான அளவீடு எடுப்பதற்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (29), திருகோணமலை றோட்டரி மாளிகைக்கு விஜயம் செய்திருந்தனர்.

மூன்று உறுப்பினர் கொண்ட குழுவில், பாண்டிசேரி மெயின் றோட்டரி கிளப் அங்கத்தவர் ஸ்ரீகாந்த், பாண்டிசேரி பிரஞ்சு நகரம் றோட்டரி கிளப் தலைவர் ச.சக்திவேல் மற்றும் சமூக பணியாளர், கைவினைப் சர்வதேச நிறுவனம், நேபாளம் ஸ்ரீகாந்த் ஆகியோர்;, 44 பயனாளிகளுக்கான செயற்கை கால்களுக்கான அளவீடுகளை எடுத்தனர்.

அளவெடுக்கப்பட்ட 44 பயனாளிகளுக்கும், செயற்கைக் கால்கள் செய்யப்பட்டன் பின்னர், அவை அவர்களுக்கு சென்றடையவுள்ளது.  திருகோணமலை றோட்டரி கழகம் மற்றும் பாண்டிச்சேரி றோட்டரி மாவட்டம்- 2982 என்பவற்றின் கூட்டுத்திட்டமாக இது அமைந்துள்ளது.

இந்தக் குழு பயனாளிகள் தேர்வுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயம்  செய்தார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .