Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 மே 06 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
சேருவில விகாரையின் நிர்வாகத்தை எவரும் கையாள முடியாதென இன்று வெள்ளிக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேருவில விகாரையின் விகாராதிபதியாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய சர்ணகீர்த்தி (வயது77) தேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
இந்நிலையில், இவருக்கு பின்னர் சேருவில விகாரையின் நிருவாகப் பொறுப்பை ஏற்கெனவே குறித்த விகாராதிபதியின் நிர்வாகத்தின் கீழ் இருந்த நிர்வாகம் பொறுப்பெடுப்பதா? அல்லது புதிய நிருவாகம் ஒன்றை தெரிவு செய்து அந்த நிருவாகத்திற்கு ஒப்படைப்பதா? என்கின்ற பிரச்சினை எழுந்தது.
இந்நிலையில் அப்பிரச்சினை இன்று வெள்ளிக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இப் பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் மூலம் உரிய தீர்வு கிடைக்கும் வரை குறித்த சேருவில விகாரையின் நிருவாகத்தை எவரும் கையாள முடியாதென இம்மாதம் 20ஆம் திகதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த விகாரையில் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ள முடியுமெனவும் சொத்துப் பிரச்சினையை யாரும் கையாள முடியாதெனவும் மூதூர் நீதிவான் ஜ.என்.றிஸ்வான் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago