2025 மே 15, வியாழக்கிழமை

சிறுமிக்கு முத்தமிட்டவர் மறியலில்

Yuganthini   / 2017 மே 14 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை – தெவனிபியவர பகுதியில், 14 வயதுச் சிறுமிக்கு முத்தம் கொடுத்த நபரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.திருக்குமரநாதன், நேற்று (13) உத்தரவிட்டார்.

திருகோணமலை - தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த மல்ஹாமிகே திலகரெட்ண (49 வயது) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி, கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில், சொக்லேட் தருவதாகக் கூறி வீட்டுக்கு அழைத்துச்சென்ற குறித்த நபர், சிறுமியை முத்தமிட்டதுடன், துஷ்பிரயோகம் செய்யவும் முற்பட்டுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், மொறவெவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி, சட்ட வைத்திய பரிசோதனைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .