2025 மே 22, வியாழக்கிழமை

சிறுவன் கொலை; மைத்துனருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்பூர் பிரதேசத்திலுள்ள பாலடைந்த கிணறு ஒன்றிலிருந்து வயிற்றில் கல் கட்டப்பட்ட

-தீசான் அஹமட்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்பூர் பிரதேசத்திலுள்ள பாலடைந்த கிணறு ஒன்றிலிருந்து வயிற்றில் கல் கட்டப்பட்ட நிலையில் குகதாஸ் தர்சன் (வயது 06) என்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உயிர் இழந்த சிறுவனின் 16 வயது மைத்துனரை தொடர்ந்து மே மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 1ஆம் மாதம் 25ஆம் திகதி குறித்த சிறுவன் பாலடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் 16 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஏற்கெனவே நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.

இந்நிலையில், குறித்த சிறுவனை நேற்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்ததே, இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டடுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .