2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சண்டையின்போது குறுக்கிட்டு மண்வெட்டியால் தாக்கிய பெண் கைது

George   / 2016 செப்டெம்பர் 01 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை - தெவனிபியவர பகுதியில், இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில், மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளதுடன் இளம் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இடம்பெற்றச் இச்சம்பவத்தில் காயமடைந்த மொறவௌ - தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த டி.எம்.எதிரிசிங்ஹ (48வயது) என்பவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது, அதனை பார்த்துக்கொண்டிருந்த பெண், மண்வெட்டியை எடுத்து குறித்த நபரைத் தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த நபர், மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து, மண்வெட்டியால் தாக்கிய அதே இடத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ரம்யதாச பிவ்மந்தி (20 வயது) என்ற இளம் பெண்ணை கைதுசெய்த மொறவௌ பொலிஸார், அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X