2025 மே 15, வியாழக்கிழமை

சமத்துவக் கலந்துரையாடல்

Princiya Dixci   / 2017 மே 16 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்

இலங்கையில், அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று, திருகோணமலை வாடிவீடு விடுதியில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. 

இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகமும் ஆசியா பவுண்டேஷனின் நிதியொதுக்கீட்டில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில், சக்தி அமைப்பினால் இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 

மூவினங்களையும் சேர்ந்த சமயத் தலைவர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இதில் கலந்துகொண்டனர். 

பிரதேசத்தில் எவ்வாறு வன்முறைகள் ஏற்படுகின்றன?, சமயத் தலைவர்களின் செயற்பாடுகள் மற்றும் இணக்க சபைகளின் தற்போதைய நிலை போன்றன பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, ஊடகவியலாளர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .